Home Uncategorized ஆசியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரமாக பெங்களூர் தேர்வு

ஆசியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரமாக பெங்களூர் தேர்வு

கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.

பணி நிமித்தமாகவும் சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

இதனால், இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணம். இந்நிலையில், ‘டாம் டாம் டிராபிக் இண்டெக்ஸ்’ என்ற நிறுவனம் 55 நாடுகளில் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தியது.

பயண நேரம், எரிபொருள் செலவு, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வு நடந்தது. இதில் ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகராக பெங்களூரு தேர்வாகி உள்ளது.

இந்நகரில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள நகரங்கள் பின்வருமாறு

( 10 கி.மீ.,தூரத்தை கடக்க ஆகும் நேரம்) 2வது இடத்தில் மஹா.,வின் புனே- 27 நிமிடங்கள், 50 நொடிகள் 3வது இடத்தில் இந்தோனேஷியாவின் மணிலா- 27 நிமிடங்கள், 20 நொடிகள் 4வது இடத்தில் தைவானின் தைசங்- 26 நிமிடங்கள், 50 நொடிகள் 5வது இடத்தில் ஜப்பானின் சபோரா – 26 நிமிடங்கள், 50 நொடிகள் 6வது இடத்தில் தைவானின் கயோசியுங் – 26 நிமிடங்கள் 7 வது இடத்தில் ஜப்பானின் நகோயா – 24 நிமிடங்கள் , 20 நொடிகள் 8 வது இடத்தில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா- 23 நிமிடங்கள் , 20 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 37 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகின்றன.

Exit mobile version