Friday, February 6, 2026
HomeUncategorizedநடிகர் கமல்ஹாசனுக்கு எவ்ளோ சொத்து இருக்குனு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனுக்கு எவ்ளோ சொத்து இருக்குனு தெரியுமா?

நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது அரசியல் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளளார்.

 தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக  தெரிவித்துள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி.   ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி.   கடனாக ரூ.49.67 கோடி உள்ளதாம்.  

சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் நான்கு வணிகக் கட்டிடங்களை அவர் வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி.  

திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும்  உள்ளது.   மேலும், கமல் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம்.  

மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ., லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி ஆக கோலிவுட் ஆண்டவரின்  மொத்த சொத்து மதிப்பு 305.55 கோடி ரூபாய் .  

கமலின் வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   அடிசினல் ஆந்தை ரிப்போர்ட்  கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் இல்லையா?.  

அப்போது, கமல் ஹாசன் தமக்கு 45,09,01,476 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131,84,45,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார்.  

மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி ரூபாய் என்றும், தமக்கு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments