Wednesday, February 4, 2026
HomeUncategorizedபோதைப்பொருள் விவகாரம்.. மாட்டிக்கொடுத்த GPay.. நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் விவகாரம்.. மாட்டிக்கொடுத்த GPay.. நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே சூப்பர் ஹிட் ஆன நிலையில், பல பெண் ரசிகைகளுக்கு இவர் favourite ஹீரோவாக மாறினார். அத பிறகு,   ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். அவரது என்ன நேரமோ தெரியவில்லை அதற்கு அடுத்து வெளியான ஜூட், வர்ணஜாலம் உள்ளிட்ட பல படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் நடித்துக் கொண்டுதான் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு அவர் படங்கள் சரிய தொடங்கின. இத்தனை ஆண்டுகள் திரையுலகில் நடித்திருந்தாலும் விரல் விட்டு என்னும் அளவிற்கே வெற்றி படங்களை கொடுத்து வந்தார் ஸ்ரீகாந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் உள்ளிட்ட படங்களும் தோல்வியை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரிடம் இருந்து போதை பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவர் முன்னாள் அதிமுக பிரமுக பிரசாத்திற்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது விசாரணைகள் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரை வாசித்து வரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதிமுக பிரமுகரிடம் நடத்திய விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரும் இருப்பதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

மேலும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடைய ஜி பேயில் இருந்து மிகப்பெரிய தொகையை அனுப்பி கொக்கைன் வாங்கப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து போதைப் பொருள் வழக்கில் அவரை 3வது குற்றவாளியாக போலீசார் தற்போது கைது செய்துள்ளார்.

இந்தவழக்கில் முதல் குற்றவாளியாக பிரதீப் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments