Friday, February 13, 2026
Homeசினிமாஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியாக ‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ‘பரீட்’!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகிறது.

படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்தவர். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.கிரண் கவனிக்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொள்ள, கலை இயக்கத்தை காந்தாரா உள்ளிட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றிய வேலு கவனித்திருக்கிறார். நடனத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்திருக்கிறார்.

இப்படத்தில் போலீஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.

கேப்டன் MP ஆனந்த் மற்றும் KSK செல்வகுமார் இருவரும் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக தயாரிப்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments