Monday, March 23, 2026
Homeசெய்திகள்திருச்சி நீலிவனேஸ்வரர் கோவிலில் நடிகை நளினி குடும்பத்துடன் சாமி தரிசனம்!

திருச்சி நீலிவனேஸ்வரர் கோவிலில் நடிகை நளினி குடும்பத்துடன் சாமி தரிசனம்!

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் அமைந்துள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும் , தயாரிப்பாளருமான நளினி தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தார் .

முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு கோவில் தல வரலாறு புத்தகம் மற்றும் மூலவர் புகைப்படமும் அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் வழங்கினர் . 

தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் நளினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மேலும் இன்று வெயிலின் தாக்கத்தினால் கோவில் வளாகத்தில் சிறிது தூரம் நடந்து வந்த நளினி தரையின் சூடு தாங்காமல் ஓடி வந்து மண்டபத்தில் நிழலில் நின்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு திரும்பவும் நடந்து சென்றார் .

பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் தேங்காய் நார் பாய் விரிப்பது தற்போது அனைத்து கோவில்களிலும் நடைமுறையில் உள்ளது .

ஆனால் இங்குள்ள கோவிலில் தேங்காய் நார் பாய் விரிக்காமல் இருந்தது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் .

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments