நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தாரை தப்பட்டை, சண்டைகோழி 2, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

நடிகை வரலக்ஷ்மி மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் வரலட்சுமியின் திருமணத்தை விமர்சித்த பலரும், இப்போது இவர்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கணவருடன் கலந்து கொண்டார். திருப்பதியில் சாமி தரிசனம் முடித்த கையுடன், காளஹஸ்தி சிவன் கோயிலிலும் ராகு கேது பூஜை செய்து வழிபாடு செய்துள்ளனர். இவர்களது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
