அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியிலும் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.
அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம் ராஜஸ்தான் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ரெஞ்சிதா நாயர் உயிரிழப்பு; லண்டனில் நர்ஸ் வேலை கிடைத்ததால் அங்கு செல்ல, ஆமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். ரெஞ்சிதாவுக்கு 7 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10-15 நாட்களாகும். தகவல்கள் அடிப்படையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும்.

