அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, அலாஸ்காவில் தரை இறங்கியுள்ளார்.
இன்று (மே 13, 2026) மாலை அவர் பெய்ஜிங் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் வர்த்தகம், ஈரான் போர்ச் சூழல், தைவான் விவகாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் விரிவாக ஆலோசிக்க உள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான டெஸ்லாவின் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் மற்றும் போயிங் நிறுவனத்தின் சிஇஓ ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சுமார் 500 போயிங் விமானங்களை வாங்குவதற்கான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காண்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்க இருப்பதால், இந்தப் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது