Home Uncategorized பொதுக்குழு உறுப்பினர்களிடம் அபிடவிட் வாங்கும் அதிமுக..!

பொதுக்குழு உறுப்பினர்களிடம் அபிடவிட் வாங்கும் அதிமுக..!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பொதுக்குழு, பொதுசெயலர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) பெற்று வருகிறது அதிமுக தலைமை.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன்பு பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணி நடந்து வருகிறது.

Exit mobile version