Wednesday, March 4, 2026
HomeUncategorizedஐம்பதைக் கடந்த பின்னும் அசத்தும்  நடிகை ரம்யா கிருஷ்ணன்...!

ஐம்பதைக் கடந்த பின்னும் அசத்தும்  நடிகை ரம்யா கிருஷ்ணன்…!

கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்கிற முறையில், கதாநாயகி வேடத்திற்கு அவரது 14 ஆம் வயதில் தேர்வானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

முதல் படம் : வெள்ளை மனசு.

கதாநாயகன் : ஒய்.ஜி.மகேந்திரன்.

அதன்பிறகு பெரிய பரபரப்பு இல்லாவிட்டாலும் தனது கலைப்பயணத்தை மிகவும் ஈடுபாட்டுடன், அதேவேளையில் தெளிவான கதாபாத்திரத் தேர்வுகளுடன்  நிதானமாக நடைபோட்டார். 
தமிழில் அறிமுகமாகி, 90 களில் தெலுங்குப் பட உலகில் கோலோச்சி, மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களிலும், அதையும் கடந்து பாலிவுட்டிலும்  வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன்.  ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரஜினிக்கு நிகராக நடிப்பில் வெளுத்து வாங்கினார். அந்தப் படத்தில் அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. தமிழ்த் திரையுலகின் இன்னொரு ஜாம்பவானான நடிகர் கமலுடன் “பஞ்சதந்திரம்” படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் நடித்தபோதும், கதாநாயகி சிம்ரனையும் தாண்டி தன்னுடைய கதாப்பாத்திரத்தில் ஜொலித்தார். நகைச்சுவையிலும் நளினம் காட்டியிருந்தார்.  

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments