Home Uncategorized பிஜே மருத்துவக் கல்லூரியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் பகுதியை அகற்றும் பணி தீவிரம்!

பிஜே மருத்துவக் கல்லூரியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் பகுதியை அகற்றும் பணி தீவிரம்!

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 270 யை கடந்துள்ளது. இன்னும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். விமானத்தில் பயணித்த 241 பேர், விடுதியில் உணவு சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் என்று மொத்தம் 270 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் இருந்து ஏர் இந்தியா போயிங் 787-8 (VT-ANB) விமானத்தின் பின்புற பகுதியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
 

Exit mobile version