Skip to main content

அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை தேவிகா பிறந்த தினம் இன்று

கிளாஸிக் கால ரசிகர்களை தன் நடிப்பால் மகிழ்வித்தவர்.பெண்மைக்கே உரித்தான அச்சம்,நாணம்,பயிர்ப்பு போன்ற குணங்களை தன் கண்களினாலேயே வெளிப்படுத்தியவர்.

அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக அப்போவே பலரால் குறிப்பிடப்பட்டிருக்குது.

சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடிச்சிருக்கார்.

ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும்.

ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.