Home Uncategorized வெயிலுக்கும் கற்றாழை, வியாதிக்கும் கற்றாழை- ஹெல்த் + அழகு குறிப்பு!

வெயிலுக்கும் கற்றாழை, வியாதிக்கும் கற்றாழை- ஹெல்த் + அழகு குறிப்பு!

உடல் சூடு மற்றும் அதிக வியர்வையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான அழகு மற்றும் மருத்துவ குறிப்பு இதோ. கற்றாழையில் அதிகமான நல்ல குணங்கள் உள்ளன, இதில் 25க்கும் மேலான நன்மைகளை கூறும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பேக்டீரியல், ஆன்டி-ஃபங்கல், கூலிங், இம்யூனிட்டி பூஸ்டிங், வைட்டமின்கள், மினரல்கள், எக்ஸாமா மற்றும் பல பலன்கள் உள்ளன.

உடலில் நச்சுகளை வெளியேற்றுதல், கல்லீரல், சிறுநீரகம், ஜீரண மண்டலம் மற்றும் பிற உடல் உறுப்புகளை வலுவூட்டும். தோல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் குணமாக்கும், சரும நோய்கள், முகப்பரு, தேம்பல், அரிப்பு, சொறி போன்ற நோய்களைப் போக்கும்.

அழகு சாதன பொருள்களில் கற்றாழை:

– சருமத்தை ஈரப்பதம் மற்றும் இளமையாக வைக்கும் சரும பாதுகாப்பு கொண்ட கற்றாழை.
– கற்றாழையை பயன்படுத்தி சோப், ஷாம்பூ, பாடி லோஷன், சானிடைசர், மற்றும் மாய்ஸ்ச்சரைசர் போன்ற பொருட்கள் இன்று கிடைக்கின்றன.

அழகு டிப்ஸ்:

– நல்ல ஆரோக்கியமான தலைமுடியை தரும்.
– தலைமுடியில் தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை நுங்கு பகுதியை கலந்து தேய்த்து, தலைமுடி கருமையாக மற்றும் அடர்த்தியாக வைக்கும்.

கற்றாழை ட்ரிங்க்:

– உடல் சூட்டை குறைக்க இரண்டு கற்றாழை மடல்களை எடுத்து, தோல் நீக்கி, அதில் உள்ள தசை பகுதியை ஏழு முறை தண்ணீரில் கழுவி, அதனுடன் அரை கப் தயிர், அரை ஸ்பூன் மிளகு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்து, வாரத்திற்கு மூன்று நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வாய்ப்புண், குடல் புண், மூலம், மலச்சிக்கல் போன்ற வியாதிகள் நீங்கும்.

ஃபேஸ் பேக்:

– முகம் அழகு பெற, கரும்புள்ளிகள் மற்றும் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் ஸ்கின் டல்நஸ் நீக்க, கற்றாழை நுங்கு இரண்டு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில்  20 நிமிடம்  அப்ளை செய்து வர முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
 இத்தனை ஆரோக்கியமும் மற்றும் மருத்துவ குணமும் கொண்ட கற்றாழையை நாம் வீட்டில் பயன்படுத்தி பல நன்மைகளை பெறுவோம்.

Exit mobile version