Sunday, March 15, 2026
HomeUncategorizedஅமெரிக்க விசாவில் புதிய நடைமுறை

அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை

அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன் பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும்.

விசாவின் நிலையை மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலை வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments