சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.
அதன் பின் பல்வேறு படங்களில் நடித்தாலும், சமூக வலைதலங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மூலம் இவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம்.
மேலும், இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் மேலும் தனது திறமைகளை வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.

