NHA/NHAI (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) விதிகளின்படி, நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையில் புதிய அபராத விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, அவசர அழைப்பு பெறப்பட்ட பிறகு, சுங்கச்சாவடியிலிருந்து (Toll booth) 10 கி.மீ சுற்றளவிற்குள் நடக்கும் விபத்துப் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமானாலோ அல்லது அவசர கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு விபத்தில் காயமடைந்தவர்களைப் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க 1 மணி நேரத்திற்கு மேல் தாமதமானாலோ, குறிப்பிட்ட அந்த ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு ஒரு சம்பவத்திற்கு ₹10,000 வீதம் அபராதம் விதிக்கப்படும். நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளானவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அவசர மருத்துவ உதவியை விரைவுபடுத்தவும், ஆம்புலன்ஸ் சேவைகளின் பொறுப்புணர்வை உயர்த்தவும் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
