Saturday, March 21, 2026
Homeசெய்திகள்50% வரி எதிரொலி: அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு!

50% வரி எதிரொலி: அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக ஓட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments