Sunday, March 22, 2026
Homeசினிமாயூடியூபில் வெளியான "தாரே ஜமீன் பர்"- கமல் போல் அமீர் கான்!

யூடியூபில் வெளியான “தாரே ஜமீன் பர்”- கமல் போல் அமீர் கான்!

புதிய முயற்சி செய்து பார்ப்பதில் கமல்ஹாசனும் அமீர் கானும் முன்னணியில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அமீர் கான் தனது நடிப்பில்,  வெளியாகி வெற்றி பெற்ற “தாரே ஜமீன் பர் (Taare Zameen Par)” திரைப்படத்தை, யூடியூபில் (YouTube) ‘மூவிஸ்-ஆன்-டிமாண்ட்’ (Movies-on-Demand) முறையில் வெளியிடுகிறார்.

இந்தத் திரைப்படத்தை யூடியூபில் மட்டுமே பார்க்க முடியும். வேறு எந்த டிஜிட்டல் தளங்களிலும் இந்தப் படம் கிடைக்காதாம். இந்தியாவில் ரூ. 100-க்கு இந்தப் படத்தைப் பார்க்கலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 நாடுகளில் அந்தந்த நாட்டுக்கு ஏற்ற கட்டணத்தில் பார்க்கலாமாம்.

தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளையும் இதே மாதிரி வெளியிடப் போவதாக அமீர் கான் தெரிவித்துள்ளார். இது திரைப்பட வெளியீட்டு முறையில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments