Thursday, March 19, 2026
HomeUncategorizedஆன்மீக சொற்பொழிவாளர் பிரம்மஸ்ரீ கோபால்ஜி காலமானார்

ஆன்மீக சொற்பொழிவாளர் பிரம்மஸ்ரீ கோபால்ஜி காலமானார்

ஆன்மீக சொற்பொழிவாளர் பிரம்மஸ்ரீ *கோபால்ஜி* (83) நெல்லை சுத்தமல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

மகாபாரதத்தை மிகச் சிறந்த பதில் சொல் தொடர் சொற்பொழிவு ஆற்றி நெல்லை, பாளையங்கோட்டையில் ஆன்மீக வட்டாரத்தில் பிரபலமானவர்.

ஒரே ஒரு மேசை அதற்கு முன் ஒரு மைக். இரண்டு டியூப் லைட் இதை வைத்து பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் மைதானத்தில் *மாத கணக்கில் மகாபாரத உபன்யாசம்* செய்வார்.

மருந்து ஆய்வாளராக அரசு பணியில் இருந்த அவர் நேர்மையை கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக அந்த உத்தியோகத்தை துறந்து பிரசங்கம் செய்ய தொடங்கினார்.

பிரசங்கத்திற்காக யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கியது கிடையாது. மீடியா வெளிச்சம் இவர் மீது படாததால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவும் மாட்டார். இவருக்கென ஒரு அபிமானிகள் வட்டம் உண்டு.

அது போதும் எனக்கு போதும் என்பார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments