“அபிராமி பட்டர் சக்தி வழிபாடு செய்தவர். ஆகவே சனாதனத்தின் பிற வழிபாட்டு முறைகளான சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம் உள்ளிட்டவற்றைத்தான் கூறினார்” என்று வாதங்களை முன்வைத்தாலும் அந்தக்கருத்தும் உடைபடுகின்றன.
எப்படி?
அபிராமி பட்டர் சனாதனத்தின் ”சக்தி” தெய்வத்தை மட்டுமின்றி, அதன் பிற தெய்வங்களான பிரம்மன், சிவன், பெருமாள், கணபதி, முருகன் போன்ற அனைத்து தெய்வங்களையும் அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஆக, அபிராமி பட்டர் அவர்கள் இம்மண்ணிற்கு வந்திறங்கிய பிற மதங்களின் ஆக்கிரமிப்பினால் மனம் மிக உழன்று பாடியதே…
”இனி யான் ஒருவர் மதத்தே மதி மயங்கேன்;
அவர் போன வழியும் செல்லேன்”
என்னும் பாடல் வரிகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன.
ஆக அவர் இயற்றிய “அபிராமி அந்தாதி” என்னும் நூலின் வழியாக அவரின் சமகாலத்தில் நிலவிய மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்டும் அவர் திடமான சிந்தனையுடன் இருந்ததையும், மாற்று மதங்களின் பாதையில் செல்வதை அவர் வெறுத்ததையும் மேற்காணும் பாடல்வரிகளைப் படித்தறிந்து கொள்ள முடிகிறது.

