தமிழ்நாடு அரசு, 2026-27 நிதியாண்டுக்கான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்களை வரவேற்கிறது..
- குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ₹50,000,
2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ₹25,000 வீதம் அரசு முதலீடு செய்கிறது.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.📌
திட்டத்தின் வகைகள் மற்றும் உதவித்தொகைதிட்டம் –
- 1: குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால், குழந்தையின் பெயரில் ₹50,000 நிலை வைப்புத் (Fixed Deposit) தொகை செலுத்தப்படும்.
- திட்டம் – 2: குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ₹25,000 நிலை வைப்புத் தொகை செலுத்தப்படும்.
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்..
- குழந்தைகள்: ஆண் வாரிசு இல்லாமல், 1 அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
வருமான வரம்பு:
- பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹72,000-க்குள் இருக்க வேண்டும்.
கருத்தடை:
- பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை (Sterilization) செய்திருக்க வேண்டும்..
இருப்பிடம்:
- பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்க வேண்டும்.
📄 சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
- ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்டது)
- ரேஷன் கார்டு (குடும்ப அட்டை)
- வருமான சான்று
- பெற்றோர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழ்🌐
விண்ணப்பிக்கும் முறை.
- இந்தத் திட்டத்திற்குத் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்களுடன் உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இ-சேவை மையம் (TNeGA) மூலம் விண்ணப்பிக்கலாம்..
