Monday, April 13, 2026
HomeUncategorizedஅரைநாளாக பள்ளி நாட்கள் குறைப்பு

அரைநாளாக பள்ளி நாட்கள் குறைப்பு

தற்போது, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வும் ஆரம்பமாகியிருக்கிறது. 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு இன்று காலாண்டு ஆரம்பமாகியிருக்கிறது.. மற்ற வகுப்புகளுக்கும் இனிமேல்தான் தேர்வு ஆரம்பிக்க போகிறது.

எப்படியும் வருகிற 27ந்தேதிக்குள் காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது…

இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்ததுமே, வருகிற சனிக்கிழமை முதல் அதாவது, 28-ந்தேதி 2-ந்தேதி 2ம் தேதி வரை என மொத்தம் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

எனவே, காலாண்டு விடுமுறைக்கு பிறகு வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது முன்னதாக அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் அதாவது, செப்டம்பர்- 21, 28, அக்டோபர்-5, 19, 26, நவம்பர் -9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என கல்வித்துறை திடீரென உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கடும் வெயில்: கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் போலவே, வெயில் கொளுத்தி வருவதால், சனிக்கிழமை மட்டும் தற்போது அரைநாளாக பள்ளி நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments