வசந்தகால மலர்களின் மென்மையில் வார்த்தெடுக்கப்பட்ட வடிவம்… அதன் அழகியலை ஆராதித்துக் கொண்ட குணம்… அரச குடும்பத்தில் இருந்தாலும், அன்றாடக்காய்ச்சிகளின் அவலத்தையும் அறிந்துகொண்ட இளகிய மனம்… பொது வாழ்க்கையின் வெளிச்சத்தால் இருண்டுபோன எதிர்காலம்… இவற்றின் மொத்த பெயர்தான் டயானா (Diana Frances Spencer)…
இங்கிலாந்தில் Norfolk-ல் Sandringham பிறந்த டயானா, புனித மேரி மேக்டலீன் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றார்… டயானாவுக்கு எட்டு வயது இருக்கும்போது அவரின் பெற்றோர் பிரிந்து விட்டனர்… தாயிடம் வளர்ந்தார் டயானா… கல்லூரி படிப்பிலும் டயானா பெரிதாக பிரகாசிக்கவில்லை… இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறந்த பியானோ கலைஞராக உருவானார்… லண்டனில் சில காலம் ஒரு குடும்பத்துக்கு செவிலித்தாயாக பணியாற்றினார் டயானா… டயானாவின் மூத்த சகோதரி சாராவுடன், வேல்ஸ் இளவரசர் சார்லஸுக்கு நட்பு இருந்தது… 1981-ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் தன் காதலை டயானாவிடம் கூற, அவரும் அதை ஏற்றுக்கொண்டார்… இருவருக்கும் அதே ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது… 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி புனித பால் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது… வேல்ஸ் இளவரசியானார் டயானா… அறுபது லட்சம் மக்கள் இத்திருமணத்தை நேரடியாக தரிசித்தனர்… 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி ஊடாக திருமணத்தில் கலந்து கொண்டனர்… 25 அடி நீளமுள்ள ஒன்பது ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள உடையை டயானா அணிந்துவர, தேவலாயத்துக்குள் ஒரு தேவதை வருவதுபோல், அந்தக் காட்சி அமைந்தது…

