0 வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் ஜாலியாக தான் இருப்பார்கள். ஆனால், பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயது இந்தியப் பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோராவின் அறிவாற்றலை பார்த்து ஒட்டுமொத்த பிரிட்டனும் வியந்து நிற்கிறது.
பொதுவாக ஒருவரது அறிவுத்திறன் ஐ.க்யூ எனப்படும் intelligence quotient மூலமாகவே அளவிடப்படும். இந்த கிரிஷ் அரோராவுக்கு சமீபத்தில் ஐக்யூ சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ மார்க்: அதில் அவர் உலகின் தலைசிறந்த அறிஞர்களாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை தூக்கிச் சாப்பிடும் வகையில் 162 ஐக்யூ மார்க் பெற்று உலகையே திகைக்க வைத்துள்ளார்.
