Home Uncategorized ஆரம்பிக்கலாமா?… பிக்பாஸ் சீசன் 5 ஆட்டத்தை தொடங்கும் கமல்ஹசன்

ஆரம்பிக்கலாமா?… பிக்பாஸ் சீசன் 5 ஆட்டத்தை தொடங்கும் கமல்ஹசன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. கடந்த சீசனை போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தான் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோவை நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். விக்ரம் பட பாணியில் ‘ஆரம்பிக்கலாமா?…’ என்று சொல்லும் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version