ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை உங்கள் கரங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்
உலக யோகா தின செய்தியில் சத்குரு
ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்பது வெளியில் இருந்து வருவது அல்ல, அது நமக்குள் இருந்து வர வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
உலக யோக தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
உலகத்தில் யோகாவை ஒரு மதமாகவோ, நம்பிக்கை முறையாகவோ, தத்துவமாகவோ இல்லாமல் உள்நிலை நல்வாழ்வுக்கான ஒரு விஞ்ஞானமாக ஏற்றுக் கொண்டு இன்றோடு 7 வருடங்கள் ஆகிறது.
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. இது ஒரு அற்புதமான சாத்தியம்.
யோகா என்ற வார்த்தைக்கு சங்கமம் என்று பொருள். அதாவது, நம் தனித்தன்மையின் எல்லைகளை தொடர்ந்து அழித்து, இந்த கணத்தில் இங்கே மிகச் சிறிய உயிராக இருந்து கொண்டே முழு பிரபஞ்சத்தின் அழியா தன்மையை உணர்கின்ற திறமையை அடைய வழிவக்கும் சாத்தியம் யோகா ஆகும்.

