Home Uncategorized அருண்பாண்டியன் தனது மகளுடன் இணைந்து நடிக்கும் ‘அஃகேனம்’

அருண்பாண்டியன் தனது மகளுடன் இணைந்து நடிக்கும் ‘அஃகேனம்’

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை உதய் கே இயக்க, பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். தமிழ், பாண்டிச்சேரி மற்றும் வடஇந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம், ஏ & பி குரூப்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. முன்னதாக ‘அன்பிற்கினியாள்’ படத்தில் இணைந்து நடித்த அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version