நேற்று கணித்து சொல்லப் பட்ட பெருமழையை விடவும் அதி பெரு மழையாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த மழையானது மத்திய கேரளம், தென் கேரளம் மற்றும் தென் தமிழகத்தில் நிலை கொள்ளும் என்று நேற்று தெரிவிக்கப் பட்டது. ஆனால், தற்போது முழு கேரளமும் தென் தமிழகம் மட்டுமில்லாது பரவலாகவே முழு தமிழகமும் இந்த மழையில் பங்கு பெறும். தென் தமிழகத்தை விட ஏனைய தமிழகத்தில் மழை அளவு மாறுபடும். தென் தமிழகத்தில் கேரளாவுக்கு இணையான பெருமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழக மலைப்பகுதிகளான நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் முதலான பகுதிகளில் மழை அளவு கூடுதலாக இருக்கும். ஆகஸ்ட்12 அல்லது 15ம் தேதி மழை தனது ஆட்டத்தை துவங்கிவிடும்.
முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தமிழக மக்கள் இந்த முறை அவர்களுக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். தென் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பயணம் செய்ய உத்தேசித்து இருப்பவர்கள் தேதிகளை ஒத்தி போடவும்.
இந்த பெரு மழைக்கு நியூட்டனின் தியரியை மேற்கோள் காட்டி ஜனவரி முதல் மே வரை கடும் வெப்பம் நிலவியது அதனை ஈடு செய்ய செப்டம்பர், அக்டோபர், நவம்பர் வரையிலுமே மழை அதிகமாக பெய்யும் என கணிக்கிறார்கள். மழையை நாம் தடுக்க முடியாது.
ஆனால், சேதத்தை நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தவிர்க்க அல்லது குறைக்க முடியும். ஆகஸ்ட் 13 முதல் 16க்குள் இந்த மழை துவங்க இருப்பதால் மக்கள் கவனமாக இருக்கவும். எவ்வளவு நாள் மழை நீடிக்கும் என்பது சொல்லப்பட வில்லை.
பல இடங்களில் கன பெய்ய வாய்ப்பு இருந்தாலும் மழை நீர் பல இடங்களில் தேங்கினாலும் மக்களை பாதிக்கும் வகையில் கேரளா போல் இருக்காது என்பது ஸ்பைடரின் கணிப்பு!

