Home Uncategorized அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலத்தில் தமிழகம் முதலிடம்!

அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலத்தில் தமிழகம் முதலிடம்!

நாட்டிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 38 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது.

அடுத்த இடத்தில்தான் நாட்டிலேயே பெரிய மாநிலமும் தமிழ்நாட்டை விட நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் இரண்டு மடங்குக்கு அதிகமாக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளே உள்ளது.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 அரசு மருத்துவக் கல்லூரிகளும் தெலுங்கானா மாநிலத்தில் 28 அரசு மருத்துவமனை கல்லூரிகளும் மேற்குவங்க மாநிலத்தில் 26 அரசு மருத்துவமனை கல்லூரிகளும் உள்ளது குஜராத்தில் வெறும் 23 அரசு மருத்துவ கல்லூரிகளே உள்ளது ஒட்டுமொத்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிகையிலும் தமிழ்நாடு முதலிடம். தனியாருடன் சேர்த்து மொத்தமாக 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.

கடந்த 2018-19 கல்வி ஆண்டை ஒப்பிடும் பொழுது 2022 -23 கல்வியாண்டில் தமிழ்நாட்டின் இளங்கலை மருத்துவ படிப்புகளின் எண்ணிக்கை 6850 லிருந்து 10,825 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதுடன் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 3160 இல் இருந்து 4830 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது நாட்டின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவாகும்.

Exit mobile version