ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் விதி. மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்டலாம்;
வைத்தியலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை ரவுடித்தனமாக பேசியுள்ளார்;
நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு, ஓ.பி.எஸ் கையெழுத்தோடு அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா?
உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை; தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு.
ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்; அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார்
தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர் செல்வமே மேடையில் சொன்னார்தானே; கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது
கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பன்னீர் செல்வத்தை மன்னித்துதான் ஏற்றோம், அவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று மேலுள்ள விதிகளில் முன்னர் திருத்தம் செய்யப்பட்டது. – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
