வேறு நீதிபதி விசாரிக்க வேண்டுமென்ற ஓ பி எஸ் கோரிக்கை நிராகரிப்பு…(உங்கள் கட்சிக்காரரை தவறாக வழிநடத்தாதீர்கள்.
ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை.
நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறியதற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்னும் நீதிபதி எச்சரிக்கை.
செய்வதறியாது திகைத்த பன்னீர் வக்கீல்கள்.
நீதிபதியை சமாதானப்படுத்திய இ.பி.எஸ் வழக்கறிஞர் விஜய் நாராயணன்..
அறியாமையால் ஒருசில வழக்கறிஞர்கள் செயல்படலாம்.. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் கோரிக்கை விடுத்ததை அடுத்து விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.
விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கும் பன்னீர்செல்வம் தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

