Saturday, March 14, 2026
HomeUncategorizedஆதினத்திற்குள் நித்யானந்தா நுழைந்தால் கைது - மதுரை ஆதீனம் எச்சரிக்கை

ஆதினத்திற்குள் நித்யானந்தா நுழைந்தால் கைது – மதுரை ஆதீனம் எச்சரிக்கை

மதுரையில் நேற்று வ.உ.சி., சிலை திறப்பில் பங்கேற்ற மதுரை ஆதீனம், அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அதில், நித்யானந்தா குறித்து கூறுகையில், ”அவன் ஒரு பொருட்டே இல்லை. மடத்திற்குள் நுழைந்தால் அவன் கைது செய்யப்படுவான்,” என்றார். மேலும், மதுரை ஆதீன மடத்தின் சார்பில், ஐந்து விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த ஓதுவாருக்கு ஞானசம்பந்தர் விருது, சைவ சமயத்தில் சிறப்பாக செயல்படும் பெண்மணிக்கு மங்கையர்க்கரசி விருது. மடத்திற்கு வெள்ளி தேர் செய்து கொடுத்த பாண்டித்துரை தேவர் பெயரில் ஒரு விருது, தியாகத்திற்காக வ.உ.சி., விருது, மதுரை ஆதீனத்திடம் தீட்சை வாங்கிய வள்ளலார் பெயரில் ஒரு விருது வழங்க உள்ளோம்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments