Skip to main content

அடுத்த 12 மணி நேரத்துக்கு கன மழை- தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

அடுத்த 12 மணி நேரத்துக்கு அதிக மழை இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து, 140 கி.மீ தொலைவில் உள்ளது.

பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கி. மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் நகர்கிறது.

பெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான், ஃபெஞ்சல் புயல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.