Monday, April 6, 2026
HomeUncategorizedஅயோத்தி ராமர் கோயில் நாள்தோறும் ஒரு மணி நேரம்  கோயில் மூடப்படும்

அயோத்தி ராமர் கோயில் நாள்தோறும் ஒரு மணி நேரம்  கோயில் மூடப்படும்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஜனவரி 23 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதிக எண்ணிக்கையில் பக்தகர்கள் திரண்டதால் அதிகாலை 4 மணிக்கு தினசரி பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொதுதரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நாள்தோறும் ஒரு மணி நேரம்  கோயில் மூடப்படும் என ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ராமர் கோயில் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

குழந்தை ராமர் 5 வயது பாலகன் என்றும், அவ்வளவு நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. எனவே குழந்தை ராமருக்கு ஓய்வு கொடுக்க, கோயிலின் கதவுகளை சிறிது நேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments