Home Uncategorized அயோத்தி ராமர் கோயில்தலைமை அர்ச்சகர் காலமானார்

அயோத்தி ராமர் கோயில்தலைமை அர்ச்சகர் காலமானார்

அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னின்று நடத்திய, தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்ஷித் என்பவர் இன்று காலை காலமானார்.

86 வயதாகும் தீட்ஷித் கடந்த சில தினங்களாகவே உடல்நிலை சரியில்லாது இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் இன்று இறந்திருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

லக்ஷ்மிகாந்த் தீட்ஷித்தின் இறுதிச் சடங்குகள் மணிகர்னிகா தலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version