Sunday, March 22, 2026
HomeUncategorizedகொத்துகொத்தா முடி கொட்டுதா? அப்போ இந்த எண்ணெய் தடவுங்க!

கொத்துகொத்தா முடி கொட்டுதா? அப்போ இந்த எண்ணெய் தடவுங்க!

பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் இப்பொது இருக்கும் பெரிய பிரச்சனை முடிஉதிர்வு. சிறுவர்கள் முதல் முதியோர் வரை பல்வேறு முடி தொந்தரவுகளை சந்திக்கின்றனர். மன அழுத்தம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற உளவியல் பிரச்சனைகள் உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் பெரிய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

முடி உதிர்வு, முடி அடர்த்தி குறைவு, முடி நிறம் மாற்றம், பேன் பிரச்சனைகள், தலையில் அரிப்பு, சொறி, சிரங்குகள் ஆகியவை முடி பிரச்சனைகளில் அடங்கும். இவைகளை தடுக்க பலர் கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காணாமல் கவலையுடன் வாழ்கின்றனர். இந்த வாழ்வியல் பிரச்சனைக்கு இயற்கையான தீர்வாக கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

கருஞ்சீரகம் முடிக்கு அவசியமான சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் இயற்கை வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. இது ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், ஆன்டி பங்கஸ் போன்ற கிருமி நாசினிகளாக செயல்பட்டு, பூஞ்சை தொற்றுகளை அழித்து முடி வேர்களுக்கு சத்துக்களை வழங்கும். முடிக்கு தேவையான ஈரப்பதத்தையும் இயற்கையான கருமையையும் ஊக்குவிக்கும்.

வீட்டில் கருஞ்சீரக எண்ணெய் தயாரிப்பு:

500 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 100 மில்லி விளக்கெண்ணெய் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, 30 கிராம் வெந்தயம் மற்றும் 30 கிராம் கருஞ்சீரகம் ஒரு கடாயில் வறுத்து, ஆறிய பின் மிக்சியில் பொடியாக அரைத்து, எண்ணெய் கலவையுடன் கலந்து விடவும். காய்ந்த கறிவேப்பிலையையும் பொடியாக்கி சேர்க்கலாம். இந்த கலவையை பத்து நாள் வெயிலில் வைத்து இயற்கையாக வெயிலில் உள்ள ஒலிக்கதிர்களால் செயல்பட விடவும்.

 இந்த எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்களை அதிகம் பெறலாம். கருஞ்சீரக எண்ணெய் தயார். இந்த எண்ணெயை எப்போதும் தலைக்கு தேய்ப்பது போல் தேய்த்து, தொடர்ந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தினால் நல்ல பலனை அடையலாம்.

இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்து, 2 மணி நேரம் ஊற வைத்து, சிகக்காய் கொண்டு குளித்தால், தோல் வியாதிகள், பொடுகு தொல்லை, மற்றும் தலையில் உள்ள பேன் ஈறு தொல்லை போன்றவை நீங்கும்.
தலையில் உள்ள முடிகளுக்கு வேர் பகுதியில் இருந்து நல்ல ரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதனால் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலை முடி நரைப்பது போகி, முழுவதும் கருமையாக மாறும்.

இந்த அற்புதமான இயற்கை மருந்தை பயன்படுத்தினால், தலைமுடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஆரோக்கியமும் கிடைக்கும், முடி இயற்கையாகவே பளபளப்பாக இருக்கும். இதனால் தலைமுடி அழகு பெற்று, மன அழுத்தம் நீங்கி, அழகுடன் காணப்படும். தலையில் வழுக்கை பிரச்சனை உள்ளவர்களும் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இருக்கும் முடிகளையும் புதிதாக முடிகள் வளர்வதற்கும் ஊக்குவிக்கும்.
இத்தனை தலை முடி ஆரோக்கியம் மிக்க கருஞ்சீரக எண்ணெயை நாம் வாழ்நாளில் தினமும் பயன்படுத்தி நன்மை அடைந்து இன்புற்று வாழலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments