Home Uncategorized எந்த காய்கறிகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்! எதை தொடவே கூடாது தெரியுமா?

எந்த காய்கறிகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்! எதை தொடவே கூடாது தெரியுமா?

நாம் தினமும் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் எவ்வாறு மருந்தாக மாறுகின்றன என்பதை ஆராய்வோம். சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டிய காய்கறிகள் எவை என்பதையும் பார்க்கலாம். சுவையுள்ள மற்றும் கசப்புள்ள காய்கறிகள் சர்க்கரை நோய்க்கு நல்லது.

துவர்ப்பு சுவையுள்ள வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, அத்திக்காய், மாதுளை, பிஞ்சு மாங்காய், பிஞ்சு கொட்டைப்பாக்கு போன்ற இயற்கை பொருட்களை உண்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புகள் குறையும் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறும்.

நீர் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், வெண்பூசணிக்காய், கோவக்காய், வெண்டைக்காய், கசப்பு சுவை மிக்க பாகற்காய் ஆகியவற்றை சாப்பிடலாம். இவை முறையாக சமைத்து உணவில் சேர்க்கப்பட்டால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அந்த நோயின் பாதிப்புகளில் இருந்து மீண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவார்கள், இதனால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

சுண்டைக்காய் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்களும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நோய்களை குணப்படுத்தும். வாரம் இரு முறை சுண்டைக்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கெட்ட கழிவுகளை வெளியேற்றும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரி செய்யும். 

சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பழுத்த பப்பாளி, அத்தி, முலாம்பழம், ஆகியவை சாப்பிடலாம். சமையலில் குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் மட்டும் உபயோகிப்பது நல்லது. கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், முருங்கக்காய், காராமணி காய், முள்ளங்கி, வெந்தயக்கீரை, பாலக்கீரை போன்ற நாட்டு காய்கறிகள் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கும். இவை உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை வழங்கி நம்மை பாதுகாக்கும்.

Exit mobile version