Wednesday, March 11, 2026
HomeUncategorized"கம்பன் என்னும் திரைக்கதை மன்னன்"  - கே.பாக்யராஜ் உரையாற்றினார்

“கம்பன் என்னும் திரைக்கதை மன்னன்”  – கே.பாக்யராஜ் உரையாற்றினார்

புதுக்கோட்டை கம்பன் கழகம் 49 ஆம் ஆண்டாக தொடர்ந்து சிறப்பான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இந்த ஆண்டு ( 2024) 10 நாள்கள் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 4 ஆம் நிகழ்ச்சி 14/07/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் கலந்துகொண்டு “கம்பன் என்னும் திரைக்கதை மன்னன்”  என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

அவருக்கே உரித்தான எதார்த்த நடையில், இராமாயணத்தின் காட்சி அமைப்புகளில் கம்பன் சொல்லி வைத்த நுட்பங்களைப் பட்டியலிட்டார். அவ்வாறு அவர் பேசுகையில் இன்றைய கால திரைப்படங்களில் பெரிதும் எதிர்பார்க்கும் கிராஃபிகௌஸ் நுட்பங்கள் அனைத்தையும் கம்பன் கவிதைவரிகளாக படைத்துள்ளான் என்று கூறி, அதற்கான மேற்கோள்களைக் குறிப்பிட்டது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.”பாக்யராஜ் பாக்யராஜ்தான்” என பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ந்தது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments