Home Uncategorized மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா!

மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மரணத்தால் மனம் உடைந்து போன பாரதிராஜா, கடந்த பல வாரங்களாக எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவரைப் பற்றி  எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அவர் சென்னையில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் மகனின் மறைவு அவரை பெருமளவு பாதித்துள்ளதால் மலேசியாவில் கோலம்பூரில் உள்ள தனது மகள் ஜனனி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மன ஆறுதலுக்காகவும், உடல்நிலை கருத்தில் கொண்டும் அவரை மலேசியாவில் ஓய்வெடுக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். எப்போது சென்னைக்கு திரும்பவார் என்ற செய்தி இதுவரை வெளியாகவில்லை.

Exit mobile version