Thursday, February 5, 2026
HomeUncategorizedபெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட பைக் டாக்கி ஓட்டுநர்! ஆப்பு வைத்த போலீஸ்!

பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட பைக் டாக்கி ஓட்டுநர்! ஆப்பு வைத்த போலீஸ்!

பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இவர், கடந்த 13 ஆம் தேதி அலுவலகத்திற்கு செல்வதற்காக பைக் டாக்கி முன்பதிவு செய்து அதில் சென்றுள்ளார். இந்த பேக் டாக்ஸியை சுகாஷ் என்பவர் ஓட்டியுள்ளார். இவர் பைக்கை வேகமாக ஓட்டினார் என்றும் சிக்னலில் நிற்காமல், சிறிய குறுகிய பாதையில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
 இதனால் ஸ்ரேயா சுகாஸிடம் ஏன் இவ்வளவு வேகமாக சென்றீர்கள் என்று கேள்வி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுகாஷ், எப்படி வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும். 

நான் ஐந்து ஆண்டுகளாக பைக் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று திமிராக பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி  சுகாஷ் ஸ்ரேயாவின் கன்னத்தில் ஓங்கி அடைந்துள்ளார். இதனால் நிலை தடுமாறி ஸ்ரேயா ரோட்டில் கீழே விழுந்துள்ளார். இதனை அப்பகுதியில் சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகிய நிலையில் ஸ்ரேயா ஜெயநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் ஸ்ரேயா, பைக் டாக்ஸி ஓட்டுனர் ஆகிய இருவரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து  விசாரித்தனர். விசாரணையில் ஸ்ரேயாவை சுகாஷ் தாக்கியது உறுதியானது. தற்போது சுகாஷ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments