Home வானிலை செம வெயில்.. வெளிய போகும் போது குடை கொண்டு போங்க..”இன்றைய வானிலை அறிக்கை”!

செம வெயில்.. வெளிய போகும் போது குடை கொண்டு போங்க..”இன்றைய வானிலை அறிக்கை”!

மேற்கத்திய காற்றழுத்தத் தாழ்வு நிலையின் (Westerly Trough) தாக்கத்தால், வழக்கத்தை விட மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்குத் தீபகற்ப இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை நோக்கி வெப்பம் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டினாலும், மாலை நேரங்களில் பெய்யும் மழையால் ஓரளவிற்கு வெப்பம் தணியக்கூடும்.

இருப்பினும், சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் தற்போதைக்கு வெப்பத்திலிருந்து எந்த ஒரு நிம்மதியும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

Exit mobile version