Home செய்திகள் தலைமைச்செயலகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

தலைமைச்செயலகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

இன்று மர்ம நபர்கள் தொலைபேசி மூலமாக  தலைமைச்செயலகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலக  ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன்   தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலும்,   காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version