Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால்.. கொன்று சூட் கேசில் அடைத்த காதலன்! பகீர் தகவல்!

திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால்.. கொன்று சூட் கேசில் அடைத்த காதலன்! பகீர் தகவல்!

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் இளம் பெண்ணை அவரது காதலனே கொன்று சூட் கேசில் அடைத்துள்ளார். பிறகு உடலை மோட்டார் சைக்கிளில் 100 கி.மீ தூரம் எடுத்துச் சென்று ஆற்றில் வீசி எரிந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

 உத்திரபிரதேச மாநிலம் கான்புரை சேர்ந்தவர் சூரஜ்(25). எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அகன்ஷா (20) உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது முதலில் நட்பாக மாறி பின்னர் காதலானது.

 ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு அகன்ஷா வின் தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே வீட்டை விட்டு வெளியேறிய அகன்ஷா. தனது காதலன் சூரஜ் குமாருடன் சென்றுவிட்டார். இந்த இளம் காதல் ஜோடி திருமணம் செய்யாமல் அனுமந்த் விகார் என்ற இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

 இந்த சூழ்நிலையில், சூரஜ்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே அகன்ஷா, தனது வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சி திருமணம் செய்து கொள்ளுமாறு சூரஜ்ஜை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அகன்ஷா தன்னை திருமணம் செய்யாவிட்டால், கற்பழித்ததாக போலீஸ் புகார் செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே அகன்ஷாக்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக சூரஜ்க்கு சந்தேகமும் எழுந்துள்ளது.

 சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் அகன்ஷாவை  வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தலையை சுவற்றில் மோதி அதில் மண்டை உடைந்து மயக்கம் அடைந்தார். மேலும் ஆத்திரம் தீராமல் அகன்ஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார்.

 பின்னர் உடலை ஒரு சூட்கேசில் அடைத்து தனது நண்பர் ஆசிஷ்குமார் என்பவரை உதவிக்கு அழைத்துக் கொண்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் அதனை எடுத்துச் சென்றுள்ளார். 100 கிலோமீட்டர் தூரம் சென்று யமுனை ஆற்றில் சூட்கேஸை வீசி எறிந்துள்ளார். முன்னதாக பிணத்துடன் சூரஜ் செல்பி எடுத்துள்ளார். இதற்கிடையே மகள் மாயமானதாக அவரது தாயார் புகார் தெரிவித்ததால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பிறகு இரண்டு கொலையாளிகளையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதை தொடர்ந்து சூரஜ், அவரது நண்பர் ஆசிஷ்குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments