புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சிகளில் இரண்டாம் பகுதியாக கவியரங்க நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் பெருந் தொழிலதிபர் திரு.க.ரத்தினம் அவர்கள் தலைமையேற்க, மாவட்ட வர்த்தக கழகத்தின் பொருளாளர் கவிஞர்.எஸ். கதிரேசன் வரவேற்பு கவிதை வாசிக்க, தொடக்கக் கவிதையை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் திரு.ஆம்.எம்.வீ.கதிரேசன் அவர்கள் வாசிக்க, நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர். திரு..ரா.ராஜசேகரன் வாழ்த்துக் கவிதை பாடினார்.
ஸ்ரீ புவனேஸ்வரி நகை மாளிகை திரு. சோம.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கவியரங்கம் தொடங்குவதற்கு முன் கம்பன் கழகத்தின் செயல்பாடுகள் மென்மேலும் சிறப்பதற்காக ” புதுகை மாதங்கி டிரேடர்ஸ்” திரு. ஆறுமுகம் அவர்கள் ஒரு லட்ச ரூபாயினை வழங்கினார். அவரின் வள்ளல் தன்மையை விழாவிற்கு வந்திருந்த அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி பாராட்டி மகிழ்ந்தனர். தலைமைக் கவிஞராக வாணியம்பாடி “கவிமாமணி” தி.மு.அப்துல் காதர் அவர்கள் பொறுப்பேற்று கவியரங்கத்தை வழி நடத்தினார்.
இந்த கவியரங்கத்தில் “வில்லும் சொல்லும் வெல்லும் விந்தை” என்னும் பொருளில் சென்னை கவிஞர். விஜயகிருஷ்ணன், கோவை கவிஞர். குரு ஞான அம்பிகா, தஞ்சை இனியன், புதுச்சேரி கவிஞர் கோவிந்தராஜன், கல்பாக்கம் கவிஞர் ரேவதி, புதுகை கவிஞர் வீ.ம.இளங்கோவன் ஆகியோர் திற்ம்பட தங்கள் கவிதையாற்றலை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் விழாக்குழு உறுப்பினர் திரு.நிலவை. பழனியப்பன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

