Skip to main content

சசிகலா திருக்கடவூர் மண்டலாபிஷேகம் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அமைந்துள்ளது உலக பிரசித்திப்பெற்ற திருக்கடையூர். தற்போது தான் இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு விற்றிருக்கும் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்டவீரட்டான தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருக்கடையூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் இத்தகைய சிறப்பு மிக்க கோயிலுக்கு நேற்று வி.கே.சசிகலா வருகை தந்தார்.அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் மரியாதை செய்து வரவேற்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற சசிகலா கோ பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் ஸ்ரீ கள்ளவாரண விநாயகர் சுவாமி, அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி சந்நிதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு அபிராமி அம்பாள் படம் வழங்கப்பட்டது.