Skip to main content

செல்போன் பேசி கொண்டே பேருந்து ஓட்டியதால் வந்த விபரீதம் - ஓட்டுநர் பணியிடை நீக்கம்

 சேலம்: ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து. காயமடைந்த 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இந்த விபத்து நடந்த இடத்தை சேலம் கோட்ட அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் ஓட்டுனர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது, பேருந்தின் நடத்துனரும் இதை உறுதி செய்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுனர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பேருந்தின் பிரேக் நல்ல நிலையில் வேலை செய்வதும் அலுவலர்களால் உறுதி செய்யப்பட்டது.- அரசு பேருந்து நிர்வாகம்