இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.
தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

