கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல்
அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில்முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார்.
மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றுவதற்கு உதவுவதற்காகவும் லைஃபை என்று அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்.
2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக போர்ட்லேண்ட் வணிக இதழால் அங்கீகரிக்கப்பட்டார்.
இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பியதால் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின்,ஹுசைனி,
உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.
அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(18-08-24) சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக இன்று மாலை 6 மணி அளவில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் டீசர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன.
