Skip to main content

சென்னை மாநகரில் மின்சார ரயில் வழக்கம் போல் இயங்கும்- தெற்கு ரயில்வே

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை இடைவிடாமல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னை முழுவதும் வெள்ளக்காடாக இருந்து வருகிறது.  மேலும், ரயில் சேவையும் நேற்று பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், கனமழையால் தடைப்பட்டு இருந்த மின்சார ரயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.