Saturday, March 7, 2026
HomeUncategorizedசென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்- ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்- ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை ரெயில்வே கோட்டம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (8-ந்தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

  • கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே காலை 7.50 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32 மணி, 10.10 மணி, 10.56 மணி, 11.50 மணி, 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
  • செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணி, செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 9.40 மணி, 11 மணி, 11.30 மணி, மதியம் 12.20 மணி, 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
  • காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் வசதிக்காக காஞ்சீபுரம்-கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments